அமெரிக்கர்களிடையே அதிகரித்து வரும் ஆவிகள் மீதான நம்பிக்கை…!!

Read Time:1 Minute, 40 Second

6eb1a800-11c5-4453-a231-e6bbcc31b4ba_S_secvpfஅமெரிக்காவின் ப்யூ ஆராய்ச்சி மையத்தின் சமீபத்திய ஆய்வின்படி ஐந்தில் ஒரு அமெரிக்க குடிமக்கள் ஆவிகளை நேரில் பார்த்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

மொத்த அமெரிக்கர்களில் பதினெட்டு சதவிகிதம் பேர் தாம் நேரில் ஆவிகளை பார்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர் என இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு இதேபோல நடத்தப்பட்ட ஆய்வில் சுமார் பதிமூன்று சதவிகிதம் பேர் இறந்துபோனவர்களைப் பார்த்ததாக குறிப்பிட்டிருந்தனர்.

இது கடந்த 1996-ம் ஆண்டு ஒன்பது சதவிகிதமாக இருந்தது. மொத்த மக்கள் தொகையில் இருபத்தாறு சதவிகித ஆண்களும், முப்பதுமூன்று சதவிகித பெண்களும் அமானுஷ்யமான அனுபவங்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்த கருத்துக்களை ஆய்வு செய்த கோல்ட்ஸ்மித் பல்கலைக்கழக ஆய்வாளர் மருத்துவர் அலைஸ் கிரிகோரி, ‘மக்கள் இதுபோன்ற அனுபவங்களுக்கு உள்ளாவதற்கு துயில் வாதம் (sleep paralysis) என்ற பிரச்சனை காரணமாக இருக்கலாம். இந்த பாதிப்பால், மாயத்தோற்றம் (Hallucination) தோன்றுகிறது. அதுவே, அமானுஷ்ய அனுபவமாக கருதப்படுகின்றது’ என குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பேருந்து மற்றும் ரெயில்களில் தூங்கவும் சத்தமாக பாட்டு கேட்கவும் தடை: இது இங்கல்ல, அமெரிக்க நகரத்தில்…!!
Next post 85 வயதிலும் திருட்டை விடாத அமெரிக்கப் பாட்டி…!!