இருட்டில் பல் துலக்கினால் நன்றாக தூக்கம் வரும்: நிபுணர் தகவல்…!!

Read Time:2 Minute, 7 Second

62ac25d3-5f17-44f6-8931-757b2a19ae20_S_secvpfஇரவு நேரத்தில் கூட சிலர் தூக்கம் வராமல் மிகவும் அவதிப்படுகின்றனர். சொகுசான படுக்கையில் படுத்தாலும் தூக்கம் வராமல் கஷ்டப்படுகின்றனர். அவர்கள் அயர்ந்து நன்றாக தூங்க புதிய வழிமுறையை நிபுணர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

இதுகுறித்து இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக நரம்பியல் நிபுணர் ரூஸ்செல் பாஸ்டர் லண்டனில் நடந்த ஒரு கருத்தரங்கில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

நமது வாழ்க்கையில் 36 சதவீதத்தை தூக்கத்தில் கழிக்கிறோம் தூக்கம் என்பது சாதாரணமானதுதான். ஆனால் மிகவும் முக்கியமானது. ஆனால் சிலர் இரவில் தூக்கம் வராமல் தவிக்கின்றனர்.

அவர்கள் தூங்க செல்லும் முன்பு கடுமையான இருட்டில் பல்துலக்க வேண்டும். அதன்பிறகு தூங்க சென்றால் இரவு முழுவதும் நன்றாக தூக்கம் வரும்.

பொதுவாக உடல் தூக்கத்துக்கு தயாராகும் போது இரவில் பல் துலுக்க பாத்ரூமுக்கு செல்கிறோம். அங்கு விளக்குகளை எரிய விடுகிறோம். அதுவே தூக்கத்துக்கு இடையூறாகிறது. மேலும் பாத்ரூமில் வைக்கப்பட்டுள்ள கண்ணாடியில் விளக்குகளின் வெளிச்சம்பட்டு மிகவும் பிரகாசமாக இருக்கும்.

அதுவும் உடலில் ஏற்படும் தூக்கத்துக்கு இடையூறு ஏற்படுத்தி கலைத்து விடும். தூக்கம் இன்மையில் உடல் எடை அதிகரிப்பு, நீரழிவு மற்றும் புற்றுநோய் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே மனிதர்களுக்கு தூக்கம் அவசியம்’’ என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஈராக்கில் 4 குர்தீஸ் ராணுவ வீரர்கள் தலை துண்டித்து படுகொலை: ஐ.எஸ். தீவிரவாதிகள் அட்டூழியம்…!!
Next post சீனாவில் 2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 17 பேர் பலி…!!