பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு மன்னிப்பு கிடையாது : பொலிஸ் பேச்சாளர்…!!

Read Time:1 Minute, 50 Second

Ruwan-Gunasekara-720x480பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்கு சட்டத்தில் இடமில்லையெனவும், அவ்வாறு ஈடுபடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

பாலியல் தொழிலை அங்கீகரிக்குமாறு கோரி அண்மையில் பாலியல் தொழிலாளர்கள் சிலர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பு குறித்து கருத்துத் தெரிவித்த அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்வதற்கு வழியல்லாத காரணத்தால் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாதென குறிப்பிட்ட அவர், பாலியல் தொழில் மைய கட்டளைச் சட்டத்திற்கு அமைய பாலியல் தொழில் மையத்தை முகாமைத்துவம் செய்தல், அதற்கு உதவிகளை வழங்குதல், பெண்கள் வீதியில் கட்டுப்பாடின்றி உலாவித் திரிதல் போன்றவற்றிற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சிறு வயதினரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் செயற்பாடுகளும் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது ஆட்களை வர்த்தகம் செய்யும் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தண்டனை வழங்கப்படுமென குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வில்லு படத்தில் இருந்து நீக்கப்பட்ட செம காட்சிகள்…! (VIDEO)
Next post வெள்ள நீருக்குள் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு…!!