சிங்கப்பூரில் செக்ஸ் வீடியோ விளையாட்டுக்குத் தடை

Read Time:1 Minute, 28 Second

சிங்கப்பூரில் செக்ஸ் காட்சியுடன் இருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வீடியோ கேமுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. சிங்கப்பூரில் ஓரினச்சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. செக்ஸ் மற்றும் மத எதிர்ப்பு கருத்துக்கள் அடங்கிய இரண்டு வீடியோ கேம்களுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் ” மாஸ் எபெக்ட்’ என்ற புதிய வீடியோ கேமை உருவாக்கி விற்பனை செய்து வருகிறது. விண்வெளியில் நடக்கும் நிகழ்ச்சிகள் குறித்து இந்த வீடியோ கேமில் குறிப்பிடப்பட்டுள்ளன. பூமியை சேர்ந்த பெண், வேற்று கிரக பெண்ணை தடவி கொடுத்து முத்தமிடுவது போன்ற காட்சியும் இதில் இடம் பெற்றுள்ளது. இதையடுத்து அந்த வீடியோ கேமுக்கு சிங்கப்பூர் மீடியா மேம்பாட்டு ஆணையம் தடை விதித்துள்ளது. வீடியோ கேம் பிரியர்கள் இந்த தடை மிகவும் அதிகபட்சமானது என அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இங்கிலாந்தில்; இந்தியர்கள் கள்ளத்தனமாக குடியேறுவது எப்படி?: பாராளுமன்ற குழு விசாரணை செய்கிறது
Next post புயலால் பாதிக்கப்பட்ட வங்காள தேசத்துக்கு சர்வதேச நாடுகள் ரூ.100 கோடி உதவி