முதுமையில் தனிமை பெண்களுக்கு சந்தோஷமே!!

Read Time:1 Minute, 47 Second

தனிமையில் முதுமைக் காலத்தை கழிப்பவர்களில், ஆண்களை விட பெண்கள் மகிழ்ச்சியாகவே உள்ளனர். இது தொடர்பாக தனிமையில் முதுமையை கழிப்போரிடம் நடத்திய ஆய்வில் தெரியவந்ததாவது: ஆண்களை விட பெண்கள், துணையை இழந்து தனிமையில் வசிக்கும் போது தைரியமானவர்களாகவே உள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்டோரிடம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. ஆண்களை விட பெண்கள், தங்களின் முதுமைக் காலத்தின் போது மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் கழிக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம், 24 மணி நேரம் முதுமையில் உள்ள கணவனை பெண்கள் கவனிக்க வேண்டிய தேவை இல்லாதது தான்.ஆண்கள் பெரும் பாலும் தங்கள் தேவைகளுக்கு எப்போதும் மனைவியையே சார்ந்திருக்கின்றனர். இதனால், மனைவியை இழக்கும் கணவர் பெரிதும் பாதிக்கப்படுகிறார். ஆனால், பெண்கள் விஷயத்தில் இது தலைகீழாக உள்ளது. கணவரை 24 மணி நேரமும் கவனிக்க வேண்டிய பணிச்சுமையில் இருந்து, விடுபடுவதால், பெண்கள் தங்கள் முதுமைக் காலத்தை மகிழ்ச்சியுடனேயே கழிக்கின்றனர். நண்பர் அல்லது உறவினருடன் வசிக்கும் ஆண்கள், தங்களின் முதுமைக் காலத்தை தனிமையில் கழிக்க நேரிடும் போது, அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது இல்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…
Next post புளொட் முக்கியஸ்தர்கள் ஜே.வி.பி முக்கியஸ்தர்கள் சந்திப்பு