நீங்கள் மரணிக்கும் போது என்ன நடக்கிறது? (வீடியோ இணைப்பு)

Read Time:2 Minute, 46 Second

dead_brain_001மரணத் தருவாயில் நாம் எப்படி உணர்கிறோம் என்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அமெரிக்கன் கெமிக்கல் சொசைட்டி நடத்திய ஆய்வுப்படி, ரணத்தைத் தழுவும் சமயம், நமது உடல் முழுவதும் பய உணர்வுதான் அதிகமாக இருக்கும் என்கிறார்கள். மிக அதீதமான பயத்தை மரணிப்பவர்கள் உணர்வார்களாம்.

மரணத்தின் தருவாயில் நமது உடம்பு முழுவதும் பய உணர்வு மேலோங்கியிருக்கும். இந்த உணர்வுகளை மூளையில் உள்ள நியூரான்கள் சேர்ந்து உருவாக்கும் பிவிடி எனப்படும் பாரா வென்டிரிகுலார் நியூக்ளியஸ்(para Venticulour Nuclus) கட்டுப்படுத்துகிறது. இதை சுருக்கமாக தலாமஸ்(Thalamas) என்று அழைக்கப்படுகிறது.

பயம், பதட்டம் உள்ளிட்டவை ஏற்படும்போது தலாமஸ்தான் அதிகம் பாதிக்கப்படும். இது மனதுக்கும், உடலுக்கும் இடையிலான உணர்வுகளைக் கடத்தும் சென்சார் போல செயல்படுகிறது.

மனதில் ஏற்படும் பய, பதட்ட உணர்வுகளை நரம்புகள் மூலம் இந்த தலாமஸுக்கு அனுப்புகிறது. அதையடுத்து மூளை உஷார் அடைகிறது. நமது உடலுக்கு என்னவோ நேரப் போகிறது என்று அது உணரத் தொடங்குகிறது.

இதையடுத்து நமது உடலில் உள்ள அட்ரீனலின் சுரப்பி(Adrenal Gland) தூண்டப்படுகிறது. இதனால் உடலில் பதட்டம் கூடுகிறது. வியர்க்கிறது. ஏதாவது செய்ய வேண்டும் என்று நமது மூளையிலிருந்து கட்டளை வருகிறது.

அட்ரீனலின் சுரப்பு அதிகரிப்பதால் இதயத் துடிப்பும் அதிகரிக்கிறது. நமது புலன்கள் அனைத்தும் ஷார்ப் ஆகிறது. நமக்கு வரப் போகும் மரணத்தை தடுக்க வழியுண்டா என்ற எதிர்பார்ப்பு உடலுக்குள் அதிகரிக்கும்.

இந்த பதட்டமும், பயமும் அதிகரிக்கும்போதுதான் நமது மூளை கோமா நிலையை எட்டுகிறது.

அதாவது எந்தவிதமான சிந்தனைக்கும், செயல்பாட்டுக்கும் இடம் இல்லாத அளவுக்கு செயல்பாடு பல மடங்கு அதிகரிக்கும்போது மூளை செயலிழக்கிறது.

இவையெல்லாம் மரணத் தருவாயில் நடப்பவை என விஞ்ஞானிகள் வீடியோ மூலம் காட்சிப்படுத்தியுள்ளனர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண் போல் முகமூடி அணிந்து சிறையில் இருந்து தப்பிக்க முயற்சித்த நபர்…!!
Next post தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தீயணைப்பு வீரர்: வைரலாக பரவும் மரண வாக்குமூலம்…!!