உடல் சோர்வை நீக்கி சுறுசுறுப்பை அளிக்கும் சூப்பர் உணவுகள்…!!
தற்போது ஏராளமான மக்கள் மிகுந்த சோர்வை சந்திக்கிறார்கள். இதற்கு போதிய தூக்கமின்மை, ஓய்வின்மை மற்றும் சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ளாமல் இருப்பது என்று காரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். பொதுவாக உடலுக்கு ஆற்றலை வழங்குவது உணவுகள் தான். அனைத்து உணவுகளிலும் ஆற்றலாக மாற்றப்படும் கலோரிகள் மற்றும் கிலோஜோலஸ் உள்ளது.
கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளும் உடலின் ஆற்றலை அதிகரிக்கும். அதேப்போல் கொழுப்புக்கள் மற்றும் புரோட்டீன்களும் ஆற்றலாக மாற்றப்பட்டு, தேவைப்படும் போது பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சமீப காலமாக ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகம் உட்கொள்வதால், நம் செரிமான மண்டலம் உணவுகளை எளிதில் செரிக்க முடியாமல் கஷ்டப்பட்டு, அதன் காரணமாக உடலின் சோர்வை அதிகரிக்கிறது.
எனவே ஒருவர் சுறுசுறுப்புடன் இருக்க வேண்டுமானால், கீழே பட்டியலிடப்பட்டுள்ள உணவுகளை அன்றாடம் உட்கொண்டு வர வேண்டியது அவசியம். குறிப்பாக இவற்றை காலை வேளையில் உட்கொண்டால், நாள் முழுவதும் ஆற்றலுடன் செயல்பட முடியும்.
முட்டை
முட்டையில் புரோட்டீன் ஏராளமாக நிறைந்துள்ளது. மேலும் இதில் வைட்டமின் பி மற்றும் வைட்டமின் டி சத்துக்கள் உள்ளதால், இவற்றை காலை வேளையில் உட்கொண்டு வந்தால், நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும்.
சோயா பீன்ஸ்
சோயா பீன்ஸில் வைட்டமின் பி, காப்பர் மற்றும் பாஸ்பரஸ் வளமாக நிறைந்துள்ளது. இதில் உள்ள வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்டை உடைத்து குளுக்கோஸாக மாற்றி, உடல் முழுவதும் ஆக்ஸிஜனை கொண்டு செல்ல உதவி, மிகுந்த சோர்வைத் தடுக்கும். எப்போது ஒருவரின் உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக உள்ளதோ, அப்போது தான் சோர்வை உணரக்கூடும். எனவே சோர்வை அதிகமாக உணர்ந்தால், சோயா பீன்ஸை உணவில் அடிக்கடி சேர்த்து வாருங்கள்.
நவதானிய செரில்
நவதானிய செரிலில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அதை உட்கொள்ளும் போது இரத்தத்தில் குளுக்கோஸ் மெதுவாக வெளியேறி, உடலில் ஆற்றலை நிலையாக வைத்திருக்கும். எனவே காலையில் நவதானிய செரில்களை உட்கொண்டு நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்படுங்கள்.
நட்ஸ்
நட்ஸில் உடலுக்கு வேண்டிய நல்ல கொழுப்புக்கள், புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து உள்ளது. நட்ஸ் உட்கொண்டால், அடிக்கடி பசி ஏற்படுவது தடுக்கப்படும். இதற்கு அதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து தான் காரணம். எனவே உங்களுக்கு சோர்வாக இருக்கும் தருணத்தில் நட்ஸை நொறுக்குங்கள். உங்கள் உடலில் ஆற்றல் மெதுவாக அதிகரிக்கும்.
தினை
தினை என்பது ஒரு வகையான அரிசி. இதில் மற்ற தானியங்களை விட புரோட்டீன் அதிகம் உள்ளது. மேலும் இதில் நிறைந்துள்ள சத்துக்கள், ஒருவரின் உடலில் ஆற்றலை சீராக பராமரிக்கும். தினையை உட்கொண்டு வந்தால், இதய செயல்பாடு மற்றும் செரிமான பாதையில் பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படும்.
பூசணி விதைகள்
பூசணி விதைகளிலும் தினையில் உள்ளது போன்று சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது. இதனை ஒருவர் ஸ்நாக்ஸாக உட்கொண்டு வந்தால், அவரின் உடலில் ஆற்றல் சீராக பராமரிக்கப்படும். அதிலும் உடற்பயிற்சிக்கு பின் இதனை உட்கொண்டால், உடலில் ஆற்றல் தக்கவைக்கப்படும்.
சாக்லேட் மில்க்
பலரும் சாக்லேட் மில்க்கை ஜங்க் உணவாக கருதுகின்றனர். ஆனால் அது தவறு. உண்மையில் சாக்லேட் மில்க்கில் 80 சதவீதம் தண்ணீர் நிறைந்துள்ளதோடு, பொட்டாசியம் மற்றும் சோடியத்தைக் கொண்டது. இதில் உள்ள சோடியம் உடலில் நீர்ச்சத்தை சீராக பராமரித்து, தசைகளின் செயல்பாடு மற்றும் இரத்தத்தில் அசிடிட்டியின் அளவு ஆகியவற்றை ஒழுங்குப்படுத்தும். எனவே சோர்வுடன் இருந்தால், ஒரு டம்ளர் சாக்லேட் மில்க் குடியுங்கள்.
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் கலோரிகள் அதிகம் இருப்பதோடு, நார்ச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம் போன்றவை ஏராளமாக உள்ளது. பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் மூளையின் சீரான செயல்பாட்டிற்கு உதவுவதோடு, மூளையில் இரத்த ஓட்டத்தை சீராக வைக்கும். மேலும் வாழைப்பழம் செரிமானத்தை அதிகரிக்கும். எனவே வயிறு நிறைய உட்கொண்ட பின்னர், ஒரு வாழைப்பழத்தை உட்கொண்டு, சோர்வை நீக்குங்கள்.
Average Rating