தீயால் உருகிய கோட்டை பூமியின் நரகமா? (வீடியோ இணைப்பு)

Read Time:3 Minute, 2 Second

zerev_fort_004-615x413ரஷ்யாவால் பால்டிக் கடற்கரையில் கட்டப்பட்ட ஒரு பிரம்மாண்டமான கோட்டை தான் ஸ்வெரவ் கோட்டை.

அதன் சுரங்க அடித்தளத்தில் வைக்கப்பட்டிருந்த எரிபொருள் உருளைகள் மொத்தமாக தீப்பற்றி எரிந்ததால், கோட்டையே உருகி உருக்குலைந்தது.
கோட்டையின் பூமிக்கடியில் இருந்த அழகிய அறைகளை இந்த பெருநெருப்பு சூறையாடிய பிறகு, அச்சுறுத்தும் குகைகளாக காட்சியளிக்கின்றன.

இதன் காரணமாக ‘பூமியின் நரகம்’ என்று இந்த சம்பவம் பெயர் பெற்றுள்ளது.

இந்த ஸ்வெரவ் கோட்டை இன்னும் பார்வையாளர்களை ஒரு செயற்கை தீவு போல கவர்கிறது.
குரோன்ஸ்ரட்டின் வடக்கே, செயிண்ட் பீட்டர்ஸ் பர்க் அருகே, கடற்கரை ஓரத்தில் மிதப்பதும் மறைவதும் போல காட்சியளிக்கிறது.

இந்த கோட்டை 1870 ல் ரஷ்ய பொறியாளர் கோன்ஸ்டண்டின் ஸ்வெரவ் என்பவரால் கட்டப்பட்டது.
இந்த கோட்டையின் நில அறைகளில், நாபம் போன்ற ஒரு உயர் வெப்ப எரிபொருள் பேரல்கள் அதிக அளவில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

திடீரென கோட்டையில் ஏற்பட்ட தீவிபத்தில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த அனைத்து எரிபொருள்களிலும் பரவி தீப்பற்றிக் கொண்டது.

தீயின் வெப்பம் 2000 °C இருந்ததால் சுவர்களிலும் கூரைகளிலும் இருந்த காரைகளும் செங்கற்களும் கூட உருகி வழிந்துள்ளது.

பிறகு, காலநிலை மாற்றத்தால் குளிர்ந்து கூரைகளில் அழகான டிசைன் போல தொங்கியபடியே காட்சியளிக்கிறது.

பேரல்கள் இருந்த இடத்தில் தீயின் தாக்கத்தால் பெரிய பள்ளங்கள் உருவாகி பதுங்கு குழிபோல காணப்படுகின்றன.

கடற்கரை எழிலோடு அழகிய கோட்டையாக வரலாற்று நினைவுச் சின்னமாக திகழ வேண்டிய கோட்டை, கட்டுப்படுத்த முடியாத ரசாயன தீவிபத்தால் நாசமானது.

நம் அறிவியல் கண்டுபிடிப்புகள் எச்சரிக்கையாக கையாள வேண்டிய அனுபவத்தை இதன் மூலம் போதித்திருக்கின்றன.

நல்ல உருவாக்கம் ஆனாலும், உருக்குலைந்து போனாலும் பழமையாக இருப்பதே ஒரு நினைவுச் சின்னம்தான். அந்த சின்னத்தை பார்த்து பரவசமடைகிறது நம் எண்ணங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விலங்குகளோடு உடலுறவு கொள்ள ஆசையாக உள்ளது: இணையத்தில் தெரிவித்த நபர்…!!
Next post உடல் சோர்வை நீக்கி சுறுசுறுப்பை அளிக்கும் சூப்பர் உணவுகள்…!!