அரிதிலும் அரிதான வெள்ளை அணில், சாம்பல் நிற அணில்களின் அழிவுக்குக் காரணமாகுமா?

Read Time:1 Minute, 30 Second

0a96334d-9b0b-45a3-86be-779b4279d4f3_S_secvpfகடந்த வாரம் அரிதிலும் அரிதான வெள்ளை அணில் இங்கிலாந்தின் பூங்கா ஒன்றில் படம்பிடிக்கப்பட்டது. இங்கிலாந்தில் இருக்கும் சுமார் ஐம்பது லட்சம் சாம்பல் நிற அணில்களுக்கு இடையே அதிகபட்சமாக நான்கே வெள்ளை அணில்கள் இருப்பதாகக் கருதப்படுகின்றது.

விலங்குகளின் ஜீன்களில் ஏற்படும் மாற்றத்தால், தமது உடலின் நிறத்தை இழந்து ‘லூசியம்’ என்கிற நிலையால் வெண்மையான ரோமத்துடனேயே இந்த அணில்கள் பிறக்கின்றன. கடந்த வாரம், இங்கிலாந்தின் செஸ்ஷைர் பகுதியில் உள்ள மார்பரி கண்ட்ரி பூங்காவில் ஆண்ட்ரூ புல்டன் என்னும் புகைப்படக் கலைஞரால் இதில் ஒன்று படம்பிடிக்கப்பட்டது.

ஏற்கனவே இருந்து வந்த சிவப்பு நிற அணில்களின் வம்சாவளி கடந்த நூற்றாண்டில் அழிந்த பின்னர், சாம்பல் நிற அணில்கள் பரவலாகத் தோன்றின.

எனவே, இந்த வெள்ளை நிற அணில்களின் வரவு, தற்போது சுலபமாகத் தென்படும் சாம்பல் நிற அணில்களின் வம்சாவளியின் அழிவுக்குக் காரணமாகலாம் எனக் கருதப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மூன்று பாட்டில் ஒயினைக் குடித்துவிட்டு மூன்று நாட்கள் ஹேங்ஓவரில் திண்டாடிய பூனை…!!
Next post வங்காளதேசத்தில் இத்தாலியர் கொலை தொடர்பாக 4 பேர் கைது…!!