அசாமில் பொதுமக்கள் பீதி வீடுகளில் செல்போன் திருடும் குரங்குகள்

Read Time:2 Minute, 22 Second

09.gifவீட்டுக்குள் புகுந்து செல்போன்களை குரங்குகள் எடுத்துச் சென்றுவிடுவதால் அசாம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குரங்குகள், வீடுகளுக்குள் புகுந்து உணவு பொருட்களை சாப்பிடுவதும், அங்கு இருக்கும் பொருட்களை எடுத்துச் செல்வதும் பல நகரங்களில் அன்றாடம் நடந்து வருகிறது. தலைநகர் டெல்லிகூட குரங்குகளிடம் சிக்கி தவிக்கிறது. அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள தனது வீட்டுக்குள் நுழைந்த குரங்குகளை விரட்டியடிக்க முயன்ற டெல்லி நகர துணை மேயர் தவறி விழுந்து உயிரிழந்த பரிதாப சம்பவம் அண்மையில் நடந்தது. இந்நிலையில் அசாமில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது என்று அந்த மாநில சட்டப்பேரவையில் பிரச்னை எழுப்பப்பட்டது. வீட்டுக்குள் கும்பலாக நுழையும் பொருட்கள் கையில் கிடைக்கும் உணவு பொருட்களை அள்ளிச் செல்கின்றன. குளிர்சாதன பெட்டியை திறக்கும் குரங்குகள், அங்கிருக்கும் குளிர்பானங்களைகூட விட்டு வைப்பதில்லை. இது போதாது என்று கடந்த ஒரு நாட்களாக வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் செல்போன், பல் துலக்கும் பேஸ்ட்டை குரங்குகள் எடுத்துச் சென்றுவிடுகின்றன. செல்போனை அருகில் உள்ள காட்டுப்பகுதியில் தூக்கி வீசிவிடுகின்றன. மங்கல்தோய் தொகுதி அசாம் கணபரிசத் எம்.எல்.ஏ. ஹிரேன் தாஸ் குரங்குகளால் மக்கள் படும் அவதியை சட்டப்பேரவையில் விளக்கினார். நகர்புறங்களில் இருந்து குரங்குகளை விரட்டியடிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் கோர்சிங் இங்கி உறுதி அளித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வீட்டுக்குள் நுழைந்தது கட்டுவிரியன் பாம்பு கடித்து 3 குழந்தைகள் பலி
Next post மதுரை அருகே அரசு பஸ்கள் மோதல்: திருப்பூரைச் சேர்ந்த பெண்கள் உள்பட 5 பேர் சாவு