கொலம்பஸ் ஒரு கொடுங்கோலன்!

Read Time:1 Minute, 48 Second

Columpas.jpgஅமெரிக்காவைக் கண்டுபிடித்த கிறிஸ்டோபர் கொலம்பஸ், ஒரு சர்வாதிகாரியாக, கொடுங்கோலனாக இருந்தது ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. ஸ்பெயின் நாட்டின் வட பகுதியில் உள்ள சிமான்காஸ் ஆய்வு மையத்தில் கொலம்பஸின் ஆரம்ப காலம் குறித்த சில ஆவணங்கள் இடம்பெற்றுள்ளது. இதில் கொலம்பஸ் குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் உள்ளன.

1492ம் ஆண்டில் கொலம்பஸ் சில பகுதிகளை தனது நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தார். அப்பகுதியை சர்வாதிகாரமாக ஆட்சி செய்து வந்துள்ளார் கொலம்பஸ்.

தன்னைப் பற்றி கடுமையாக விமர்சனம் செய்த ஒரு பெண்ணின் நாக்கைத் துண்டித்து, அவரை நிர்வாணமாக கழுதை மீது ஏற்றி ஊர்வலமாக கொண்டு செல்ல கொலம்பஸ் ஆணையிட்டதாக ஒரு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து 23 பேர் கூறிய வாக்குமூல¬ம் அந்த ஆவணத்தில் இடம்பெற்றுள்ளது. கொலம்பஸ் மிகக் கொடூரமான ஒரு நபராக இருந்ததாக இந்த ஆவணங்களை ஆய்வு செய்த ஸ்பெயின் வரலாற்றாசிரியர் கான்சுலோ வெரேலா தெரிவித்துள்ளார்.

கொலம்பஸ் அப்படி இருந்த காரணத்தால்தானோ என்னவோ, அவர் கண்டுபிடித்த அமெரிக்காவும் இன்று சர்வாதிகாரமாகத்தான் இருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல் மூலம் மதத்தலைவர் படுகொலை
Next post புலிகளின் கைக்கூலிகளை புலிகளே தெரியப்படுத்துகின்றனரா?