புலிகள் கொள்கை: அரசு பதில்

Read Time:1 Minute, 59 Second

தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகள் மீதான நிலைப் பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று மத்திய அரசு தெளிவுப்படுத்தி உள்ளது. ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமி அண்மையில் மத்திய வெளி யுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு விடுதலைப் புலிகள் மீதான மத்திய அரசின் நிலைப்பாடு மற்றும் கொள்கை குறித்து விளக்கம் கேட்டு கடிதம் எழுதி இருந்தார். இதற்கு மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் சிவசங்கர் மேனன் சுப்பிரமணியசுவாமிக்கு கடந்த 13ந் தேதி பதில் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான விடுதலைப்புலிகள் மீதான மத்திய அரசின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு இலங்கை அரசை அவ்வபோது மத்திய அரசு முறைப்படி யாக கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள இலங்கை அரசு இந்தியாவின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. இவ்வாறு சிவசங்கர் மேனன் அந்த கடிதத்தில் கூறியுள்ளார். ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமியின் கடிதத்திற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இவ்வாறு பதிலளித்திருப்பதாக பத்திரிகை செய்தி ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஸ்டவ் வெடித்து இளம் பெண் பலி
Next post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…