பச்சையாக சாப்பிட வேண்டிய உணவுகள்…!!

Read Time:3 Minute, 1 Second

unboiled_vegertbles_001உணவுப் பொருட்களை பச்சையாக, அதாவது வேக வைக்காமல் அப்படியே சாப்பிடுவதன் மூலம் அதில் உள்ள முழு ஊட்டச்சத்துக்களையும் பெற முடியும்.

ப்ராக்கோலி

ப்ராக்கோலியை பச்சையாக சாப்பிடுவதன் மூலம், அதில் உள்ள மைரோசைனேஸ் என்னும் நொதி, கல்லீரலில் புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜென்களை வெளியேற்றிவிடும்.
மேலும் ப்ராக்கோலியை வேக வைத்து சாப்பிட்டால், அந்த நொதிகள் செயலிழக்கப்படும். எனவே ப்ராக்கோலியை அவ்வப்போது பச்சையாக சாப்பிடுங்கள்.

பூண்டு

பூண்டுகளை பச்சையாக மென்று சாப்பிடும் போது, அதில் உள்ள அல்லிசின் என்னும் கலவை டி.என்.ஏ-வைப் பாதுகாக்கும். ஒரு நிமிடம் பூண்டை வேக வைத்தாலும், அதில் உள்ள அல்லிசின் செயலிழக்கப்பட்டுவிடும்.
எனவே தினமும் ஒரு பூண்டை பச்சையாக சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

தேங்காய்

தினமும் சிறிது தேங்காய் துண்டை பச்சையாக மென்று சாப்பிடுவதன் மூலம், அதில் உள்ள நல்ல கொழுப்புக்கள் கெட்ட கொழுப்புக்களை கரைத்து குறைத்து, மூளை மற்றும் இதயத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும்.

விதைகள்

விதைகளான ஆளி விதை, பூசணி விதை போன்றவற்றில் புரோட்டீன், ஜிங்க் வளமாக நிறைந்துள்ளது. இவை நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை அதிகரிக்கும்.
முக்கியமாக இந்த விதைகள் பச்சையாக இருக்கும் போது தான் இச்சத்துக்கள் வளமையாக இருக்கும். எனவே இந்த விதைகளை சாலட்டுகளில் தூவி சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

பச்சைக்கீரைகள்

பச்சை இலைக்காய்கறிகளான பசலைக் கீரை, கேல், முட்டைக்கோஸ் போன்றவற்றை பச்சையாக சாப்பிடுவதன் மூலம், வைட்டமின் சி மற்றும் ஈ, நார்ச்சத்து, நொதிகள் மற்றும் அமினோ அமிலங்கள் போன்றவற்றைப் பெறலாம்.

முளைகட்டிய பயிறு

முளைக்கட்டிய பயிர்களில் பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் மற்றும் குளோரோபில் போன்றவற்றை அதிகம் உள்ளது. இவை ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்று செயல்பட்டு, உடலுக்கு பாதுகாப்பை வழங்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க முக்கிய மூன்று வழிகள்…!!
Next post 60 ஆண்டு காதலை அழகாக கொண்டாடிய தம்பதி: வீடியோ இணைப்பு…!!