பூமியை நெருங்கும் ராட்சத விண்கல்: விஞ்ஞானிகள் நல்ல செய்தி..!!

Read Time:1 Minute, 54 Second

download (2)விண்வெளியில் பல விண்கற்கள் மிதக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை பூமியை நோக்கி பாய்ந்து வரும் போது எரிந்து சாம்பலாகின்றன. சில கற்கள் பல துண்டுகளாக உடைந்து பூமியின் மீது விழுந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்த நிலையில், தற்போது பூமிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று தற்போது பூமியை நெருங்கி வருகிறது. அதன் பெயர் விண்கல் 2015 TB145. இந்த விண்கல் 4,99,000 கிலோமீட்டர் தூரத்தில் பூமியைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2006ம் ஆண்டுக்குப் பிறகு பூமிக்கு மிக நெருக்கமாக வந்து செல்லும் விண்கல் இதுவாகும்.

இந்த விண்கல் இருக்கும் இடத்தை கடந்த அக்டோபர் 10-ம் தேதி ‘நாசா’ மையம் அடையாளம் கண்டது. 280 முதல் 620 மீட்டர் விட்டம் கொண்ட இந்த விண்கல் பூமியில் மோதினால் கடும் விளைவுகள் ஏற்படும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஓசோன் மண்டலம் முற்றிலும் அழியும். அதன் மூலம் பருவ நிலையில் மாறுதல்கள் உருவாகும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

அதே நேரத்தில் மணிக்கு 125,529 கி.மீட்டர் வேகத்தில் பாய்ந்து வரும் இந்த விண்கல் பூமியை தாக்காமல் கடந்து செல்லும் என்றும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீனாவின் உதவிக்கு ஜனாதிபதி பாராட்டு..!!
Next post செவ்வாய் கிரகத்தில் சித்திர எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பாறைகள்? (வீடியோ இணைப்பு)…!!