செங்குன்றம் அருகே லாரி அதிபர் வெட்டிக்கொலை…!!

Read Time:3 Minute, 41 Second

f102dd0d-fce5-4393-a083-290a72fd215c_S_secvpfசெங்குன்றத்தை அடுத்த எம்.ஏ.நகர் கம்பர் தெருவை சேர்ந்தவர் அஜய் (23). லாரி அதிபர். இன்று காலை 11.45 மணியளவில் மோட்டார் சைக்கிளில் செங்குன்றம்–திருவள்ளூர் சாலையில் காந்திநகர் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட வந்தார்.

அவருடன் நண்பர்கள் நரேன், சுந்தர் ஆகியோரும் வந்து இருந்தனர். பங்கில் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் 8 பேர் கும்பலாக வந்தனர். அவர்கள் திடீரென அஜயை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். தலை, கழுத்து ஆகிய இடங்களில் வெட்டுக்காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். சிறிது நேரத்தில் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

இந்த கொலையை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்த அஜயின் நண்பர்கள் நரேன், சுந்தர் ஆகியோர் அங்கிருந்து ஓடி விட்டனர்.

கொலை நடந்த இடம் செங்குன்றம் மற்றும் சோழவரம் போலீஸ் நிலையங்களின் எல்லைக்குட்பட்டது. இது எந்த போலீஸ் நிலையத்துக்குட்பட்டது என்ற சர்ச்சை எழுந்தது. இதனால் படுகொலை நடந்து நீண்ட நேரமாகியும் போலீசார் யாரும் வரவில்லை.

அஜயின் உடல் பெட்ரோல் பங்கிலேயே ரத்த வெள்ளத்தில் கிடந்தது. ஏராளமானோர் திரண்டு வந்து அவரது உடலை பார்த்து சென்றனர். இதனால் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.

சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு செங்குன்றம் போலீசார் அங்கு விரைந்து வந்து அஜய் பிணத்தை அப்புறப்படுத்தினர்.

போலீஸ் உதவி கமிஷனர் மன்னர்மன்னன், இன்ஸ்பெக்டர் கருணா ஆகியோர் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவரை பிரபல ரவுடி கஞ்சாமணி கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இவன் மீது கொலை, கொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளன. செங்குன்றம் மற்றும் சோழவரம் போலீஸ் நிலையங்களில் மட்டும் 15–க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. எனவே இவன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான்.

ஒரு மாதத்துக்கு முன்புதான் விடுதலை ஆகி சிறையில் இருந்து வெளியே வந்தான். இவன் ஒருவாரமாக அஜயிடம் மாமூல் கேட்டு வந்தான். பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த அவன் இன்று தனது கும்பலை அனுப்பி கொலை செய்தது தெரியவந்துள்ளது. கஞ்சா மணியையும், அவனது கும்பலையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட அஜய் செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்தார். ஒரு வாரத்துக்கு முன்புதான் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற வாலிபரால் பரபரப்பு: 70 பேர் கைது…!!
Next post அதிர்ச்சியில் அமெரிக்கா: காரணம் என்ன…?