ஞாபக சக்தியை அதிகரிக்கணுமா? அப்ப இதைப் படியுங்க..!!
ஒருவரைப் பெரிதும் களைப்படையவும்,சோர்வடையவும் செய்வது அதிக உழைப்பு என்று பலரும் சொவதெல்லாம் தப்பு. இந்த டயர்டுக்குக் காரணம் குறைவான உழைப்பே என்பதுதான் உண்மை.
இரவு நேரத்தில் குறிப்பாக அதிகாலை 2 மணிக்கும் 4 மணிக்கும் இடையில் மனிதனின் நினைவாற்றல் மிகவும் பலவீனமாக உள்ளது. அவனது இயக்கங் களும் மிகவும் மந்தமடைகின்றன. அந்த நேரத்தில் கணிதப் பணியில் அவன் ஈடுபட்டால் பல தவறுகள் நேரக்கூடும்.
அதேபோன்று பகலிலும் மதியம் 12 மணியிலிருந்து 2 மணி வரை பலவீனமான நேரம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.காலை 8 மணியில் இருந்து 12 மணி வரையும்,மதியம் 2 மணியிலிருந்து மாலை 5 மணி வரையும் மனிதனின் திறமைகள் மிக உயர்ந்த நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மூளை உழைப்பின் தீவிரமும் வேலை நேரத்தில் மாற்றமடையக் கூடும்.
memory-power-
இந்த மூளையானது மனித உடலின் மொத்த எடையில் 2.5 சதவீதம்தான் என்றாலும், அது மனிதனின் சக்தி மூலத்தில் 20 சதவீதத்தைப் பயன்படுத்துகிறது. ஆகவே நாம் நமது ஞாபக சக்தியையும், மூளைத்திறனையும் பெருக்க மூளையை சரிவரக் கவனித்து, அதற்கு போதுமான போஷாக்கை அளிக்க வேண்டும்.சிலருக்கு சிலவேளைகளில் மூளைக்கு மருந்து கொடுப்பதும் அவசியமாகலாம். அதிலும் மூளைத்தளர்ச்சி என்ற நாள்பட்ட நோய் பாதிப்புக்கு மருந்து கொடுக்க வேண்டியது அவசியமாகிறது. குளூக்கோஸ், மூளைக்கு முக்கியமாக போஷாக்கு அளிக்கும். மூளை களைப்பு அடைவதைத் தடுக்க சில அமினோ அமிலங்களும் அவசியம்.
மூளை வேலையின்போது வளர்சிதை மாற்றத்தைத் துரிதப்படுத்துவதற்கு சில பொருட்கள் அவசியம். குளுடாமினிக் அமிலம், மெதியனைன், வைட்டமின் பி-1, பி-2, பி-6 ஆகியவை அந்தப் பொருட்களாகும். மத்திய நரம்பு மண்டலத்தை நல்ல நிலையில் வைத்திருப்பதற்கு சரியான உழைப்பு முறையும், உள்ளத் தூண்டல்களும்கூட அவசியமாகும்.
இனி நினைவு திறனை அதிகரிக்கும் வழிகள்:
* எதையும் தாய் மொழியிலேயே சிந்திக்க வேண்டும், நீங்கள் படிப்பது ஆங்கிலமோ, ஹிந்தியோ, பிரெஞ்சோ – உங்கள் தாய் மொழி என்னவோ அதில் சிந்தித்து மனதில் பதிய செய்ய வேண்டும்.
* புரியாமல் எதையும் படிக்க கூடாது. ஒரு வரி புரிய ஒரு நாள் ஆனாலும் பரவாயில்லை.
* முழு கவனம் மிக அவசியம்.
* mnemonics வைத்து படிப்பது ஒரு கலை. அதை உங்கள் குழந்தைக்கு கற்று கொடுங்கள்.
உதாரணம்: news – north, east, west, south
* படித்தவுடன் எழுதி பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ஹோம் வொர்க் என்ற பெயரில் கடமைக்கு எழுதும் சடங்கு பயனில்லை.
* படங்களுடன் கூடிய தகவல்கள் மனதில் பதியும். பட விளக்கங்களை திரும்ப திரும்ப வரைந்து பார்க்கச் சொல்லவேண்டும்
* நல்ல உறக்கம் அவசியம். குறைந்தது 8 மணி நேர தூக்கம் கண்டிப்பாக தேவை.
* இரவில் சீக்கிரம் தூங்கி அதிகாலை படிக்கும் படி சொல்லவேண்டும்.
* தூங்க போகும் முன் அன்று படித்த அனைத்தையும் ஒரு முறை மேலோட்டமாக நினைவு படுத்தி பார்க்க வேண்டும். அப்படி செய்யும் போது நாம் தூங்கினாலும் நம் மூளையின் சில மூலைகள் விழிப்புடன் இருந்து தகவல்களை ஷார்ட் டெர்ம் மெமரியில் இருந்து லாங் டெர்ம் மெமரியில் பதிவு செய்து கொண்டு இருக்கும். இது மிக முக்கியமான பயிற்சி ஆகும்.
* மாவு சத்து உள்ள உணவுகள் மந்த நிலையை ஏற்படுத்தும், எனவே புரதம் நிறைந்த எளிதில் செரிக்கும் உணவை சேர்த்துகொள்வது நல்லது.
Average Rating