ரத்தம் வெளியேறும் நேரம்…!!

Read Time:2 Minute, 32 Second

77-300x217-615x445ஒரு மனிதனின் உடலில் மிக முக்கியமானது ரத்தம். ஒரு மனிதனுக்கு அப்படிப்பட்ட ரத்தம் உறையும் நேரம் என்பது மிகவும் முக்கியம். ஒருவருக்கு ஆழமான காயம் ஏற்படும்போது ரத்தம் வெளியேறும்.
இவ்வாறு வெளியேறும் ரத்தம் எவ்வளவு நேரத்தில் உறைகிறது என்பதை கணக்கிடுவதே ரத்தம் உறையும் நேரம் ஆகும்.

இதற்கு ஒரு சோதனையை செய்கின்றனர். விரல் நுனியை ஆல்கஹால் கொண்டு துடைத்து விட்டு சிறிது அழுத்தி தேய்கின்றனர். இந்த அழுத்தம் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். பின்னர் சுத்தமான ஊசியை கொண்டு விரல் நுனியில் குத்துகின்றனர். அப்போது ரத்தம் வர ஆரம்பிக்கும். இந்த நேரத்தை குறித்து கொள்கின்றனர்.

பின்னர், “பிளாட்டிங்’ பேப்பரை வைத்து ரத்தத்தை ஒத்தி எடுக்கின்றனர்.ரத்தம் வெளிவருவது நிற்கும் வரை இவ்வாறு தொடர்ந்து செய்கின்றனர். இதன்படி ரத்தம் நிற்கும் நேரத்தை கணக்கிடுகின்றனர்.

இதனையே ரத்தம் உறையும் நேரம் என்கின்றனர். இந்த நேரம் ஒரு நிமிடம் முதல் 3 நிமிடம் வரை இருக்கும்.

சராசரியாக காயங்கள் ஏற்பட்டால் ரத்தம் உறையும் நேரம் 6 முதல் 10 நிமிடங்களாக இருக்கும். சிலருக்கு ரத்தம் உறைய தாமதமாகலாம்.

இவர்களுக்கு, ரத்த பிளேட்லெட்டுகள், த்ராம் பேரசைட்ஸ் குறைபாடுகள் உள்ளன என அறியலாம். சிலர், “ஹீமோபிலியா’ எனும் நோயினால் பாதிக்கப்பட்டிருக்கலாம். இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தம் உறைய அதிக நேரமாகும்.

சிலருக்கு மணிக்கணக்கானால் கூட ரத்தம் உறையாது. இதனால் ரத்த இழப்பு அதிகமாகி உடல்நிலை பாதிக்கப்படுவதோடு, உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம். இந்த நோய் மரபணு குறைபாட்டினால் வருவதாகும். பெரும்பாலும் இவை பாரம்பரிய நோயாக இருக்கும். சந்ததிகளையும் தாக்கும் அபாயம் உண்டு.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வித்யா கொலை தொடர்பில் பிரதி பொலிஸ்மா அதிபரை கைது செய்ய நடவடிக்கை…!!
Next post ஞாபக சக்தியை அதிகரிக்கணுமா? அப்ப இதைப் படியுங்க..!!