மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்ததில் இளைஞன் பலி…!!

Read Time:1 Minute, 15 Second

heat energyமோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்ததில் கரவெட்டி பகுதியை சேர்ந்த குமாரசாமி என்ற இளைஞன் தீக்காயங்களுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
நேற்று கரவெட்டியில் இருந்து கப்பூது நோக்கிச் சென்று கொண்டிருந்த மேற்படி நபரின் மோட்டார் சைக்கிள், திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

இந்த தீ, மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இளைஞனின் உடலிலும் பரவியதையடுத்து நிலை தடுமாறி அவர் விழுந்துள்ளார்.

உடனடியாக அப்பகுதியால் சென்றவர்கள் குறித்த நபரை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர், மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் கூறினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கல்விக்கான நிதி அதிகரிப்பு…!!
Next post அமரர் வேலாயுதத்தின் பூதவுடல் தீயில் சங்கமம்..!!