எம்பிலிப்பிட்டியவில் காணாமற் போன நபர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

இரத்தினபுரி எம்பிலிப்பிட்டி கொலன்ன ரங்கட்டிகென பகுதியில் ஒரு வருடத்திற்கு முன்னர் காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் நபர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் ஒரு வருடத்திற்கு முதல் தனது மகன் காணாமல் போனதாக தந்தை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார் எனினும் பொலிஸாரர் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் இருப்பதை கண்டுகாணாமல ;போன நபரின் தாயார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார் இதனை தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட பொலிஸார் சந்தேகத்திற்கிடமான பெண்ணொருவரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்ததன் மூலம் காணாமற்போன நபர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் போடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே இச்சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சடலத்தை கிணற்றில் இருந்து வெளியில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Comments

No Comments

Leave a reply

Name *

Mail *

Website