பொன்சேகா விடுதலை சந்தேகம்: மனைவி அனோமா கருத்து

sarathfonseka_family“பொன்சேகாவை ராணுவ காவலில் இருந்து விடுவிப்பது எளிதான காரியமல்ல’ என, அவரது மனைவி அனோமா தெரிவித்துள்ளார். இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா, தற்போது ராணுவ காவலில் வைக்கப்பட்டுள்ளார். ராஜபக்ஷே அரசை கவிழ்க்க சதி செய்தது உள்ளிட்ட பல வழக்குகள் அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளன. ராணுவ கோர்ட்டில் அவர் மீது விசாரணை நடக்கவுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து பொன்சேகாவின் மனைவி அனோமா கூறியதாவது:ராணுவ காவலில் இருந்து வெளியே வர வேண்டுமென பொன்சேகா விரும்புகிறார். இந்த வழக்குகளில் இருந்து விடுபட வேண்டும் என்பது அவரது விருப்பம். அவரை விடுவிப்பது குறித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, அரசுக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது. இது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், வழக்குகளில் இருந்து விடுபடுவது அத்தனை எளிதான காரியமல்ல என்பதை பொன்சேகா உணர்ந்துள்ளார்.சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மூலம், அவரை வெளியில் கொண்டு வருவோம். அதற்கான மன உறுதி எனக்கு உள்ளது. இந்த நெருக்கடிகளில் இருந்து விரைவில் மீள்வோம் என்ற நம்பிக்கையுள்ளது.இவ்வாறு அனோமா கூறினார்.

Comments

No Comments

Leave a reply

Name *

Mail *

Website