பருத்தித்துறையில் டிங்கிப் படகிலிருந்து வெடிமருந்துகள் தற்கொலைதாரி அங்கிகள் மீட்பு!
பருத்தித்துறைக் கடற்பரப்பில் நின்ற டிங்கிப் படகு ஒன்றில் இருந்து தற்கொலைதாரி அங்கிகள் மற்றும் வெடிப்பொருட்களைத் தாம் மீட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த ஒருவருக்கு சொந்தமான இந்தப்படகின் அடிப்பாகத்தில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த 14 பொதிகளிலிருந்த 3கிலோ நிறையுடைய சி4ரக வெடிப்பொருட்கள் ஐந்து தற்கொலைதாரி அங்கிகள் மற்றும் வெடிப்பொருட்கள் ஆகியவற்றைக் கடந்த வியாழக்கிழமை தாம் கைப்பற்றியதாக கடற்படையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. படகின் கீழ் போலியான அடிப்பாகத்தில் இந்த வெடிப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தனவாம் தாம் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் பயனாகவே இவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இதேவேளை விஸ்வமடுக்குளம் மற்றும் வெள்ள முள்ளிவாய்க்கால் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களில் இயந்திரத் துப்பாக்கியின் 150 ரவைகள், 6டெட்டனேட்டர்கள் ஒருதற்கொலைதாரி அங்கிகள் மற்றும் 4கிரனைட்டுகள் ஆகியவை கடந்த வெள்ளிக்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
Filed Under: செய்திகள்
Comments
No Comments
Leave a reply