இராஜினாமா செய்ய தயாராகிறார் மேர்வின்சில்வா
எதிர்வரும் பொதுத்தேர்தலில் சரத்பொன்சேகா தலைமை தாங்கும் ஜனநாயக தேசிய முன்னணியானது கம்பஹா மாவட்டத்தில் ஒரேயொரு பாராளுமன்ற ஆசனத்தை பெற்றால் கூட தனது பாராளுமன்ற பதவியிலிருந்து விலகுவதாக தொழில் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா சவால் விடுத்துள்ளார். நேற்றைய தினம் லங்காபுவத்துக்கு செவ்வி வழங்கிய போதே மேர்வின் சில்வா இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் வரும் தேர்தலில் அதிகளவு வாக்கு வித்தியாசத்தில் தாம் வெற்றி பெறுவது உறுதி என்றும் கம்பஹா மாவட்டத்தின் தலைமை வேட்பாளர் பஷில் ராஜபக்ஷ அதிககூடிய வாக்குகளைப் பெறுவார் எனவும் தெரிவித்துள்ளார். இதேவேளை இந்த மாதத்தில் ஒரேயொரு நாள் மட்டுமே பாராளுமன்றம் கூடியுள்ளதால் இந்த மாதத்துக்கான சம்பளத்தை தாம் பெறப் போவதில்லை என நேற்றைய அவையில் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளதோடு பிற பாராளுமன்ற உறுப்பினர்களும் இம்மாத சம்பளத்தை அரசாங்கத்துக்கு வழங்கி நாட்டின் அபிவிருத்தியை பலப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். ஆனால் இவரது இந்த கோரிக்கைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பதிலளிக்கவில்லை
Filed Under: செய்திகள்
Comments
No Comments
Leave a reply