அதிக விலைக்கு அரிசியை விற்கும் வர்த்தக நிலையங்கள் முற்றுகை -பந்துல குணவர்தன

அரசாங்கம் அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையிலும் பார்க்க அதிக விலைக்கு அரிசியை விற்கும் வர்த்தகர்களைத் தேடிக் கண்டுபிடித்து சட்டத்தின் முன்நிறுத்த விஷேட நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். கொழும்பில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார். இங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் முன்வரும் பண்டிகைக் காலங்களில் பொதுமக்களுக்கு தாராளமாக அரிசி கிடைக்ககூடிய சகல ஏற்பாடுகளையும் அரசாங்கம் செய்துள்ளது இக்கால கட்டத்தில் எவ்விதவிலை அதிகரிப்பும் ஏற்பட வழியில்லை. அரிசியை பதுக்குவோர் மற்றும் அதிக விலையில் விற்போர் ஆகியோரை கண்டுபிடிக்க நாளைமுதல் விஷேட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றன. இதில் எவ்வித அரசியல் பாகுபாடுகளும் காட்டப்பட மாட்டாது என்றும் அவர் கூறினார்.

Comments

No Comments

Leave a reply

Name *

Mail *

Website