நாடாளுமன்றில் மனோகணேசன் சுலோகம் ஏந்திப் போராட்டம்

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் ஐக்கிய தேசிய முன்னணியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான மனோ கணேசன் நாடாளுமன்றம் கூடியவேளை சுலோகம் ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டார். பிரதமர் அவர்களே கண்டி மாவட்டத்தில் நாவலப்பிட்டி நகரத்தில் அராஜக கமகே அரசியலை உடனடியாக தடுத்து நிறுத்தி நீதியானதும் நேர்மையானதுமான தேர்தலை உறுதி செய்யுங்கள் என்று சிங்களமொழியில் எழுதப்பட்டிருந்தது. கண்டி மாவட்டத்தில் அராஜகமான அரசியல் சூழ்நிலை நிலவுவதாகவும் இதனால் மக்களின் சுதந்திரம் பாதிக்கப்படுவதாகவும் அங்கு அவர் மேலும் தெரிவித்தார். ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் கண்டி மாவட்ட வேட்பாளரான மஹிந்தானந்த அளுத்கமகேயின் தேர்தல் பிரச்சார நிலையமாக நாவலப்பிட்டி பொலிஸ் நிலையம் இயங்குவாக மனோகணேசன் ஏற்கனவே குற்றம் சுமத்தியிருந்தார். பெரும்பான்மை இனத்தவர்களின் இவ்வாறான செயற்பாடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதன் மூலமே மக்கள் உண்மைகளை தெரிந்துக் கொள்ளக் கூடியதாக உள்ளது என மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

Comments

No Comments

Leave a reply

Name *

Mail *

Website