அவசரகால சட்டம் மேலுமொரு மாதத்திற்கு நீடிப்பு

அவசரகாலச் சட்டம் மேலும் 1மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது கடந்தமாதம் கலைக்கப்பட்ட நாடாளுமன்றம் நேற்று நள்ளிரவு மீண்டும் கூடியது நேற்றுகாலை இடம்பெற்ற அவசரகால சட்டம் நீடிக்கப்படுவது தொடர்பான பிரேரணை நேற்று பாராளுமன்றில் 69மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது  அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிக்கும் பிரேரணைக்கு ஆதரவாக 93 வாக்குகளும் எதிராக 24வாக்குகளும் அளிக்கப்பட்டன. பிரேரணைக்கு ஆதரவாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும் வாக்களித்தன. ஐக்கிய தேசிய கட்சி ஜே.வி.பி., ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் தமிழ் தேசியகூட்டமைப்பு ஆகியன பிரேரணைக்கு எதிராக வாக்களித்தன இந்த அவசரகால சட்ட நீடிப்புக்கான கடந்தமாதம் கலைக்கப்பட்ட நாடாளுமன்றம் மீண்டும் நேற்று கூட்டப்பட்டது.  இதேவேளை பொதுத்தேர்தல் பிரச்சாரங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளமையால் இன்றைய அமர்வுக்கு பெருமளவான உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

Comments

No Comments

Leave a reply

Name *

Mail *

Website