நித்தியானந்தா, ரஞ்சிதா செக்ஸ் வீடியோ – ஒளிபரப்ப தடை கோரி வழக்கு
நித்தியானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் இருந்த வீடியோ காட்சிகளை டிவி சானல்கள் ஒளிபரப்ப தடை விதிக்கக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்கறிஞரும், கர்நாடக மாநில வக்கீல்கள் சங்கத் தலைவருமான கே.என்.சுப்பார ரெட்டி தாக்கல் செய்துள்ள மனுவில், நித்தியானந்தா நடிகை ரஞ்சிதாவுடன் அந்தரங்கமாக இருப்பது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோவை டிவி சானல்கள் ஒளிபரப்பு செய்வது சட்டவிரோதமாகும். மேலும், சன்னியாசி தர்மம் மீது நம்பிக்கைக் கொண்டுள்ள அனைவருமே அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தக் காட்சிகளை தொலைக்காட்சிகள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பி வருகின்றன. இதைப் பார்க்கும் சிறார்களும், இளோயர்களும் தவறான நம்பிக்கைக்கு இட்டுச் செல்லப்படுவர். மேலும் குடும்பத்தோடு டிவி பார்க்கும்போது இந்தக் காட்சிகளை ஒளிபரப்புவதால் குடும்பத்தினர் பார்க்க முடியாமல் தவிக்கும் நிலையும் ஏற்படுகிறது. எனவே இந்த காட்சிகளை டிவி சேனல்கள் ஒளிபரப்பு செய்ய தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். தனது மனுவில் எதிர் மனுதாரர்களாக தலைமைச் செயலாளர், போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோரை அவர் கூறியுள்ளார்.
Filed Under: செய்திகள்
Comments
No Comments
Leave a reply