இந்தோனேசியா தலைநகர் மாறுமா?

இந்தோனேசியா தன் தலைநகரை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து ஆலோசித்து வருகிறது. இந்தோனேசியாவின் தற்போதைய தலைநகர் ஜகார்த்தா. இங்கு போக்குவரத்து நெரிசல், குப்பைக்கூளங்கள் அதிகரித்துள்ளன. இந்நகரத்தின் மக்கள் தொகையும் 1.20 கோடிக்கும் மேல் அதிகரித்துள்ளது. இங்கு ஏற்படும் வெள்ளத்தால், ஆண்டுதோறும், ஆயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்வதோடு, ஏராளமான சேதங்களும் ஏற்பட்டு வருகின்றன. கடல் மட்டம் உயர்ந்தால், இந்நகரின் நிலை மேலும் மோசமாகும். வரும் 2025ம் ஆண்டு, ஜகார்த்தா நகரில் அமைந்துள்ள அதிபர் மாளிகை வாசல் வரை கடல் அலைகள் வர வாய்ப்பு உள்ளன என, உலக வங்கியின் ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரணங்களால், டிசம்பர் மாதம் நிருபர்களுக்கு பேட்டியளித்த, இந்தோனேசிய அதிபர் சுசிலோ பாம்பாங் யுத்தோயனா, தலைநகரை மாற்றக்கூடிய திட்டம் பற்றிய பேச்சை மீண்டும் துவக்கி உள்ளார். இதே திட்டம், இந்தோனேசிய முன்னாள் அதிபர் சுகர்னோ மற்றும் சுகர்தோ காலத்திலும் எழுந்தது. இதுகுறித்து, நகர்ப்புற திட்ட நிபுணர்கள் கூறுகையில், “இந்தோனேசியாவிற்கு புதிய தலைநகரை உருவாக்குவதற்கு அதிக நிதி தேவை’ என்றனர். சுகர்தோ அதிபராக இருந்த காலத்தில், ஜகார்த்தாவின் கிழக்கில் 50 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள ஜாங்கால் பகுதியை தலைநகராக மாற்ற, ஆதரவு அளித்தார். ஆனால், 1998ம் ஆண்டு, அவர் தன் பதவியை ராஜினாமா செய்ததும், அந்த திட்டம் கைவிடப்பட்டது. இந்தோனேசியாவின் முதல் அதிபர் சுகர்னோ, பாலன்கரயா நகரை, தலைநகராக மாற்ற திட்டமிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

No Comments

Leave a reply

Name *

Mail *

Website