தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறுவர் போராளிகள் விடுவிக்கப்படுவர்

தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சிறுவர் போராளிகளும் எதிர்வரும் மேமாதத்துடன் விடுவிக்கப்படுவர் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது இதனை சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் ஜெகத் வெல்லவத்தை தெரிவித்துள்ளார் ஒருவருட புனர்வாழ்வு தி;ட்டத்தின் முடிவின் பின்னர் அவர்கள் அனைவரும் அரசாங்கத்தினால் பெற்றோர்களிடம் கையளிக்கவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார் இதற்கிடையில் தற்போது புனர்வாழ்வு பெற்று வரும் முன்னாள் போராளிகளில் 40சதவீதமானவர்கள் 18வயதுக்கும் குறைவானவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் 11ஆயிரம் போராளிகள் தற்போது புனர்வாழ்வு பெற்று வருகின்றனர். இந்நிலையில் சிறுவர் போராளிகளை விடுவிப்பது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

No Comments

Leave a reply

Name *

Mail *

Website