சில ஊடகவியலாளர்கள் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்..

ஜனாதிபதி மஹிந் தராஜபக்ஷவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் சில சக்திகள் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக புனித இளைஞர் அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரத்னஜோதி தேரர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை நெருக்கடியான நிலைக்கு இட்டுச் செல்லும் நோக்கில் சில ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார். தமது குழுக்கள் மீது தாமே தாக்குதல் நடத்தி அந்தப்பழியை அரசாங்கத்தின் மீPது குற்றம் சுமத்துவதற்கு சிலர் முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். தேர்தலின் பின்னர் பல்வேறு பிரதேசங்களில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் போது அரசாங்கத்திற்கு எதிரான ஓர் அபிப்பிராயத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் சூழ்ச்சித்திட்டமே இதுவென அவர் சுட்டிக் காட்டியுள்ளார். மக்கள் பேராதரவை பெற்றிருந்த முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத்பொன்சேகாவை அரசியலில் ஈடுபடுத்தி அவரை அரசியல் அநாதையாக எதிர்கட்சிகள் மாற்றியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். மேலும் தங்களது நோக்கங்களை நிறைவேற்றும் நோக்கில் சரத்பொன்சேகாவை சில சக்திகள் பகடைக்காய்களாக பயன்படுத்திக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Comments (1)

malar .c

February 9th, 2010 at 3:46    


இவர்களிடையே ஏற்பட்டுள்ள மோதல் படையிலும் பிளவை ஏற்படுத்தி அவர்களிடையேயும் அழிவை உண்டாக்கும். ஆனால், பின்னணியில் இயக்கிய இந்திய அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பாடம் கற்பிக்கப் போவது யார்? திருந்தாப் பிறவிகளை வருந்தச செய்வது யார்? பேரினப் படுகொலைகளைத் தூண்டிவிட்டவர்களையும் அவற்றுக்கு உதவி செய்தவர்களையும் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களையும் வீண்தத்துவத்தை வறட்டுத்தனமாகக் கத்திக் கொ்ணடிருந்தவர்களையும் தண்டிப்பது யாரோ? பேரழிவுகளை உருவாக்கியவர்கள் குடும்பத்தினருடன் சிறு அழிவையாவது சந்திப்பதுதானே முறை இது நடக்குமென்று தெரியும் இவ்வளவு துரிதமாக என்று நம்பமுடியல்ல. தங்களது உரிமையைத்தா என்று கேட்ட தமிழர் மேல் தங்களால் தடைசெய்யப்பட்ட குண்டுகளையும் கொடுத்து வேட்டையாடு விளையாடு என்று சொன்ன சர்வதேச பேமாளிகளும், என்றும் பகைமையுடைய இந்தியாவும், பாகிஸ்த்தானும், சீனாவும் ஓரணியில் அத்துடன் மேற்குலகமும், ரஸ்சியாவும் சேர்ந்து தமிழர்கள் மேல் தகாத போரை இந்த வேட்டைக்காரன் மூலமும், வேட்டைநாய் மூலமும் நடத்தி முடித்தது. இன்று வேட்டைக்காரனும் வேட்டைநாயும் மோதிக்கொண்டது. இனிவரும் காலங்கள் இந்தப்பெருச்சாளிகள் மோதிக்கொள்ளும். இது நிஜம். இல்லாவிட்டால் இவ்வுலகைப்படைத்தவன் தவறிழைத்துவிட்டான் என்று தான் சொல்லமுடியும். அவன் தவறிழைக்கமாட்டான். நீதிதேவன் அவனே. முசோலினி சொனியாவும் ராகுல் வின்சியும் பதில் கொடுத்தாக வேண்டும். தமிழர் மேல் இழைத்த தவறால் வரும் காலங்களில் வருந்தப்போவது இவர்களே. தமிழர் மீதான ஆக்கிரமிப்புப்போர் தமிழனை அறுத்திருக்கலாம். இவர்களுக்கு இது தான் தொடக்கப்புள்ளி. மரம் வெட்டுப்பட்டாலும் வேர்கள் காயவில்லை. துளிர்விடும். தமிழன் தோல்வியைக்கண்டு துவண்டுபோறவனல்ல. வெற்றியைக்கண்டு மயங்கிவிடுபவனும் அல்ல..இலங்கை அரசு தமிழ் மக்களை மீள்குடியேற்றம் என்ற பெயரில் வன்னியில் குடியமர்த்தியுள்ள நிலையில் அங்கு மர்மக்கொலைகள் நடந்தேறி வருகின்றன.இந்நிலையில் மீண்டும் வன்னியில் குடியேறி வரும் மக்களை வரவேண்டாம் என, அங்கு குடியமர்ந்து சிங்களபடையினரின் கொடுமைகளை அனுபவிக்கும் மக்கள் தெரிவித்துள்ளார்கள் நேற்று கிளிநொச்சியில் கணேசபுரம் பகுதியில் இரண்டு பெண்கள் படுகொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டுள்ள நிலையில் கண்டெடுக்கப்பபட்டு உள்ளார்கள் .ஒருவர் சொல்லுகிறார் கொல்லப்பட்ட அவலம் 30 ஆண்டுகளின் பின் நிறுத்தப்பட்டுள்ளதாம்? இவர்காள் கொல்லப்பட்டதுக்கு என்ன காரணமோ? பக்சே நம் நாட்டு அரசியல்வாதிகளிடம் நன்கு பாடம் படித்துள்ளார். எனவேதான் நள்ளிரவில் கைது செய்துள்ளார். ஆனால், பொன்சேகா ஐயோ கொல்றாங்களே கொள்றாங்களே எனக் கத்தி ஒளிபரப்பு செய்ய தொலைக்காட்சி நடத்த வேண்டும் எனப் பாடம் படிக்கவில்லை போலும். நெருநல் ஒருவன் இன்றில்லை என்றால் நேற்று உயிருடன் இருந்தவன் இன்று இல்லை என்பதை மட்டும் குறிப்பதில்லை. நேற்றுப்பதவியில் இரு்நதவன் இன்றைக்கு அப்பதவியில் இல்லை என்பது போன்ற நிலையாமையைக் குறிக்கும் என விளக்கியுள்ளார்.உலகை ஏமாற்ற வெளியே விடுவது போல் விட்டு விட்டு பிறகு அவர்களை வெள்ளை வேனில் வைத்து கடத்துவதும் பலாத்காரம் செய்வது, தமிழர்களின் மிச்ச மீதியிருக்கும் உடமைகளை சிங்களர்கள் அள்ளிக் கொண்டு போவதும் தொடர்ந்து நடக்கிறது. பிரபாகரன் ஏற்படுத்தி வைத்த ஒரு ராஜாங்கத்தை வஞ்சகமாக அழித்ததோடு அல்லாமல் அந்த பழியையும் அவர் மீதே போடுகிறார்கள் நயவஞ்சகர்கள் இதற்கு மற்றோர் எடுத்துக்காட்டே ஆர்ப்பாட்ட அழிவுகார சேகோ சந்திக்கும் இவ்வவலங்கள். பக்சே வாழ்விலும் இது உண்மையாகும் காலம் வெகு தொலைவில் இல்லை. தற்போதைய நிலைப்பாடு கண்டு பின்னணியில் உள்ளோர் பெருமை கொள்வதிலும் நிலையாமை உணர்ந்து இனியேனும் திருந்தினால் அவர்களுக்கு நல்லது..

Leave a reply

Name *

Mail *

Website