ஜனாதிபதியுடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பேச்சு நடத்த வேண்டும் -புளொட் தலைவர் வேண்டுகோள்

இலங்கையின் சிறுபான்மைக் கட்சிகளான தமிழ் தேசியகூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ_ம் அரசாங்கத்துடன் பேச்சு நடத்த வேண்டும் என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ்பேசும் மக்களின் பிரச்சனைக்கு தீர்வைத் தேடித்தரும் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வரலாற்று ரீதியான வெற்றியை பெற்றுள்ளார் அத்துடன் கடந்த தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பெருந்தொகையான மக்கள்  ஏற்றுக் கொண்டுள்ளமையை எடுத்துக் காட்டுகிறது. எனவே ஜனாதிபதியுடன் இணைந்தே சிறுபான்மை மக்களின் பிரச்சனையை தீர்த்துக் கொள்ள வேண்டும் என சித்தார்தன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த விடுதலைப்புலிகளின் யுகத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு விட்ட பிழைகளை திரும்பவும் விடக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் விடுதலைப்பலிகளினால் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களுக்கு இடையிலான பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளும் வாய்ப்புகள் முடக்கப்பட்டதாகவும் அவர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.

Comments

No Comments

Leave a reply

Name *

Mail *

Website