நீதவான்கள் சமநிலையைப் பேணுவது மிகவும் இன்றியமையாதது -முன்னாள் பிரதம நீதியரசர்
நீதவான்கள் சமநிலையைப்பேணுவது மிகவும் இன்றியமையாதது எனவும் மக்களுக்கு நியாயமான தீர்ப்பு கிடைக்காவிட்டால் அவர்கள் அதிருப்தியுடன் நீதிமன்றத்தை விட்டு வெளியேறுவார்கள் எனவும் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார் எல்லா சந்தர்ப்பங்களிலும் மிகவும் சமநிலையான பக்கச்சார்பற்ற தீர்ப்புகளை வழங்க வேண்டியது நீதவான்களின் தலையாய கடமை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு இனங்கள், மதங்கள் கொண்ட ஓர்சமூகக் கட்டமைப்பில் தீர்ப்புகளை வழங்குவது சிரமமானதென்ற போதிலும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நியாயமான தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
Filed Under: செய்திகள்
Comments
No Comments
Leave a reply