பொதுத் தேர்தலில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரசியல்வாதிகளின் புதல்வர்கள் போட்டி
நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ச பிரதமரின் புதல்வர் விதுர விக்கிரமநாயக்க ஆகியோர் போட்டியிடவிருப்பதாக தெரியவந்துள்ளது. அரசியல் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் இம்முறை தேர்தலில் களமிறக்க ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் தீவிரம் காட்டி வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச கீர்த்தியை பெற்றுக்கொண்ட பிரபல கிரிக்கெட் நட்சத்திரம் ஒன்றை மாத்தறை மாவட்டத்தில் களமிறங்க ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் புதல்வர் விமுக்தி குமாரதுங்கவும் தேர்தலில் போட்டியிடவிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
Filed Under: செய்திகள்
Comments
No Comments
Leave a reply