ராஜபக்சேவுடன் கூட்டு சேர தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவு- சிங்கள ஊடகம்
நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்சே தலைமையிலா ஆளும் கூட்டணியில் இணைந்து போட்டியிட தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாக சிங்கள பத்திரிக்கையை மேற்கோள் காட்டி புலிகளின் தமிழ்வின் செய்தி வெளியிட்டுள்ளது. அதிபர் தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அரசுடன் இணைந்து செயல்படும் யோசனைக்கு அது வந்திருப்பதாக அந்த செய்தி கூறுகிறது. இதுதொடர்பாக ராஜபக்சேவுடன் பேசவும் திட்டமிட்டப்பட்டு வருகிறதாம். அதிபர் தேர்தலுக்கு முன்பாக ராஜபக்சேவை, கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சந்தித்து கூட்டமைப்பு மற்றும் தமிழர்களின் கோரிக்கைகளை விவரித்திருந்தார். இருப்பினும் ராஜபக்சேவிடமிருந்து சாதகமான பதில் வராமல் போகவே பொன்சேகாவுக்கு தனது ஆதரவைத் தெரிவித்தது கூட்டமைப்பு. அதிபர் தேர்தலில் தமிழர் பகுதிகளில் முழுக்க முழுக்க பொன்சேகாவுக்கே ஆதரவாக வாக்குகள் விழுந்தன. இந்த நிலையில், அரசுடன் மோதல் போக்கைக் கையாளாமல் கூட்டணியில் இணைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு விரும்புவதாக கூறப்படுகிறது.
Filed Under: செய்திகள்
Comments (2)
நக்கீரன்
February 8th, 2010 at 22:17
இனி என்ன,
தமிழரின் நலனுக்காக எண்டு சொல்லி கொண்டு , தலையை சொறிஞ்சு கொண்டு இந்த கூத்தமைப்பினர் ராஜபக்சே பக்கம் சாய வேண்டியது தானே..
இதில புதுசு ஒன்னும் இல்லை.
ஆர்யா
February 12th, 2010 at 23:01
பிரபாகரனை ஏமாற்றிய மாதிரி மகிந்த ராஜபக்செவை ஏமாற்ற முடியாது , ஏனெனில் அவர் படித்தவர் பகுத்தறிவுள்ளவர் நேர்மையானவர். அது எல்லாத்தையும் விட மேற்குலக ஏகாதிபத்திய சக்திகளிடம் அடிபணியாதவர். பிரபாகரன் ஏகாதிபத்திய சக்திகளின் கை கூலி.
Leave a reply