இராணுவப்பேச்சாளராக மீண்டும் பிரசாத் சமரசிங்க நியமனம்
பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க மீண்டும்இலங்கையின் இராணுவப்பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார் அவர் திங்கட்கிழமை (இன்று) முதல் இராணுவப் பேச்சாளருக்கான கடமையை பொறுப்பேற்கவுள்ளார் இராணுவப்பேச்சாளராக இருந்த பிரிகேடியர் உதய நாணயக்கார இராணுவத்தின் பிரதம களப்பொறியியலாளராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் இன்றுமுதலே அவரும் கடமையை பொறுப்பேற்கவுள்ளார். முன்னர் இராணுவப்பேச்சாளராக இருந்த பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தின் இராணுவ ஆலோசகராக நியமிக்கப்பட்டிருந்தார் இதனால் எற்பட்ட வெற்றிடத்திற்கே பிரிகேடியர் உதய நாணயக்கார நியமிக்கப்பட்டிருந்தார் லண்டனிலிருந்து இலங்கை வந்துள்ள பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க இராணுவத்தின் பிரதான தொலைத்தொடர்பு அதிகாரியாகவும் சமிக்கை அதிகாரியாகவும் நியமனம் பெற்றிருந்தார் மேலும் தற்போது அவர் வகிக்கும் பதவிக்கு மேலதிகமாக இராணுவபேச்சாளர் நியமனமும் வழங்கப்பட்டுள்ளது.
Filed Under: செய்திகள்
Comments
No Comments
Leave a reply