யாழ். மாநகர முதல்வர் ஊடகத்திற்கு அச்சுறுத்தல் விடுத்ததாக தகவல்

epdp-major1108aதமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிசோர் உதயன் சுடரொளி ஆசிரியர் வித்தியாதரனுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் யாழப்பாணத்திலிருந்து வெளியாகும் உள்ளுர் நாளிதழ் ஒன்றுக்கு யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா அச்சுறுத்தல் விடுத்திருப்பதாக ஊடகச் செய்தியொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் தென்னிலங்கை வீதியோர வர்த்தகர்களை ஊக்குவிப்பதில் யாழ் மாநகரசபை நிர்வாகம் முழுஅளவில் செயற்படுவதாக குற்றம்சாட்டப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பில் குடாநாட்டிலிருந்து வெளிவரும் உள்ளுர் நாளிதழ் ஒன்று ஆசிரியர் தலையங்கம் ஒன்றை எழுதியிருந்தது. இதனையடுத்து ஆளும் பொதுசன ஐக்கிய முன்னணி சார்பில் யாழ் மாநகர முதல்வராக உள்ள யோகேஸ்வரி பற்குணராஜா குறித்த நாளிதழ் அலுவலகத்தை இழுத்து மூடப்போவதாக அச்சுறுத்தியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments (2)

Shan Thavarajah (SWISS, Bern)

February 8th, 2010 at 3:22    


Hi Douglas , If not you do not have Maheswary, but very quickly finded another keep, how is it possible ? tell me only to that secret please.
Note: I am not a minister, just only a Sri Lankan tamil, i can`t to pay that`s keeps. Lot of thanks.

RAM

February 8th, 2010 at 9:34    


shan yes you are 100% right.all keeps are VIP now

Leave a reply

Name *

Mail *

Website