தாய்லாந்தில் சுற்றிவளைப்பு 45பேர் கைது!! போலி கடனட்டைகளுடன் கனேடியப் பிரஜையான தமிழரொருவர் உட்பட மூன்று தமிழர்கள் கைது! பிரபா என்னும் புலிப் பிரமுகர் தப்பியோட்டம்!!

Read Time:2 Minute, 49 Second

புலிப் பிரமுகர்களினால் இந்தோனேசியா, கனடா போன்ற நாடுகளுக்கு தமது கப்பல்கள் மூலம் தமிழ்அகதிகள் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து தாய்லாந்தில் வைத்து மேற்படி கப்பல்களில் ஆட்களை ஏற்றியனுப்பிய சந்தேகநபர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளார். தாய்லாந்து பெண்மணியைத் திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகளின் தந்தையான பிரபா என்னும் புலிப் பிரமுகரே தாய்லாந்தின் பாங்கோக்கிலுள்ள குரும்தோன்புறி என்னுமிடத்திலிருந்து லாகோஸ் எனுமிடத்திற்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை ஞாயிறன்று மாலை தாய்லாந்து சீ.எஸ்.டீ பொலீசார் குலாம்தே என்னுமிடத்தில் அமைந்துள்ள குலாம்தே ஹோட்டலைச் சுற்றிவளைத்து தேடுதல் நடத்தியபோது ஒரு கனேடியத் தமிழர் உட்பட மூன்று இலங்கைத் தமிழர்களைக் கைது செய்துள்ளதுடன், அவர்கள் வசமிருந்த 104 (கடனட்டைகள்) கிறடிட் கார்ட், கிரடிட்காட் ரீடர் என்பவற்றையும் கைப்பற்றியுள்ளனர். இதன்போது கனடாப் பிரiஐயான 24வயதான சிவப்பிரியன் சிவப்பிரகாசம், 22வயதான அஜந்தன் பாலேந்திரன், 28வயதான வெங்கடேஸ்வரன் மகேஸ்வரன் ஆகியோரே கைதுசெய்யப்பட்டவர்கள் ஆவர். இவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இன்றுகாலை தாய்லாந்து பொலீஸார் சுவீசான் என்னுமிடத்திலுள்ள இந்தமறா என்ற ஊரில் நடத்திய சுற்றிவளைப்பின் போது 45இலங்கைத் தமிழர்கள் விசா இல்லாமல் தாய்லாந்தில் தங்கியிருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றுகாலை கைது செய்யப்பட்ட குறித்த 45பேரில் 24பேர் 01வயது முதல் 13வயதுக்கிடைப்பட்ட சிறுவர்கள் எனவும் தெரிய வருகின்றது. இவ்வாறு கைது செய்யப்பட்ட 45பேரும் விசா இல்லாதோருக்காக தாய்லாந்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புமுகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Thanks.. WWW.ATHIRADY.COM

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

2 thoughts on “தாய்லாந்தில் சுற்றிவளைப்பு 45பேர் கைது!! போலி கடனட்டைகளுடன் கனேடியப் பிரஜையான தமிழரொருவர் உட்பட மூன்று தமிழர்கள் கைது! பிரபா என்னும் புலிப் பிரமுகர் தப்பியோட்டம்!!

  1. Just now I called Piraba and spoke to him over 30mts and the information published in Nitharsanam is wrong. Could you please publish the original source of this information, As a media everyone wanted a braking news but we shouldn’t be attacking anyone in a personnel cause. Please verify this information or remove this article from this site. There are lots of Tamils helping each other during the difficult time and we shouldn’t be discouraging by this gossip and please encourage our brothers and sisters.

  2. கடந்த முப்பது வருடங்களாக நடந்து முடிந்த விடயங்கள் நாங்கள் எல்லாம் மனிதமே இல்லாத வெறிபிடித்த பிச்சைக்கார சிந்தனையில் ஊறிய காசுப் பேய்கள்
    என்பதை அம்பலப்படுத்திவிட்டன
    தூரநோக்கில்லாத அடுத்த வேளை வாழ்வதுக்காக எவனையாவது ஏமாற்றி பிழைக்க எண்ணும் குண்டுசட்டிக்குள் குதிரைஓட்டும் கோமாளிகள் நாங்கள்.
    எம்மை போலவே மற்றவர்களும் குருடர்களாக வாழ்வதாக எண்ணி எங்களையே நாங்கள் ஏமாற்றி கொண்டு இருக்கிறோம்.
    இவ்வளவும் நடந்தும் நாங்கள் திருந்தவில்லை என்றால் எப்பதான் நாங்கள் திருந்துவதோ?

Leave a Reply

Previous post போக்குவரத்து அமைச்சரால் அரசாங்கத்திற்கு 17கோடிரூபா நட்டம் -சிங்கள ஊடகம் தெரிவிப்பு
Next post முக்காடு போட்டபடி காவல் நிலையத்தில் கையெழுத்திட புவனேஸ்வரி